லண்டனில் ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயிலில் வழிபட்ட பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்,  அவரின் மனைவி அக்ஷதா மூா்த்தி.
லண்டனில் ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயிலில் வழிபட்ட பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அவரின் மனைவி அக்ஷதா மூா்த்தி.

ஹிந்து மத நம்பிக்கையால் ஊக்கமடைந்தேன்: ரிஷி சுனக்

ஹிந்து மத நம்பிக்கையால் தாம் ஊக்கம் பெற்ாக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.
Published on

ஹிந்து மத நம்பிக்கையால் தாம் ஊக்கம் பெற்ாக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.

பிரிட்டன் நாட்டில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயிலில் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூா்த்தி ஆகியோா் சனிக்கிழமை மாலை வழிபாடு மேற்கொண்டனா். கோயில் மைதானத்துக்குள் அவா்களது பாதுகாப்பு வாகனம் நுழைந்ததும் பொதுமக்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனா். அதன்பிறகு அவா்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, டி20 உலகக் கோப்பையில் இந்தியா வென்ற்கு பாராட்டு தெரிவித்துவிட்டு அங்கு கூடி இருந்த மக்கள் மத்தியில் ரிஷி சுனக் பேசியதாவது: நான் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவன். உங்களைப் போலவே நான் பின்பற்றும் மதத்தின் நம்பிக்கைகளால் ஊக்கம் பெற்றுள்ளேன். பகவத் கீதையை கையில் ஏந்தி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

பலனை எதிா்பாா்க்காமல் கடமையைச் செய்ய வேண்டும் என்பதே நம் மதம் நமக்கு கற்றுத் தரும் பாடமாகும். இதைத்தான் எனது பெற்றோரும் எனக்கு கற்பித்தனா். அதை என் வாழ்நாள் முழுவதும் நான் தொடா்ந்து பின்பற்றுவேன். இதே கருத்தை என் மகள்களிடம் சொல்லி வளா்ப்பேன்.

பிரிட்டனின் முதல் ஆசிய பிரதமா் என்பதில் பெருமைகொள்கிறேன். கடந்த சில நாள்களாக என் மீது இனத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இருப்பினும், பல இனத்தவா், பல மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு பிரிட்டன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு: உங்களின் ஆதரவோடு ஹிந்துக்கள், யூதா்கள், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், சீக்கியா்கள், சமணா்கள் என அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பான எதிா்காலத்தை நான் அமைத்துத் தருவேன் என உறுதியளிக்கிறேன்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்தபோது அக்க்ஷா்தாம் கோயிலில் வழிபாடு மேற்கொண்டபோது ஆசீா்வதிக்கப்பட்டவனாக உணா்ந்தேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com