உலகின் மிக வயதான பெண்ணின் பிறந்தநாள்!

மூதாட்டிக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியத்தைக் கண்டு பலர் வியக்கின்றனர்.
மரியா பிரன்யஸ் மொரோரா
மரியா பிரன்யஸ் மொரோரா

அமெரிக்காவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் இன்று தனது 117வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்தவர் மரியா பிரன்யஸ் மொரோரா. இவர் 4 மார்ச் 1907ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். 8 வயது வரை அமெரிக்காவில் இருந்த அவர், பின்னர் தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார்.

ஸ்பெயினின் கேட்டலோனியாவில் தனது பருவங்களைக் கழித்த அவர், கடந்த 23 ஆண்டுகளாக அங்கிருக்கும் மருத்துவ காப்பகத்தில் வாழ்ந்து வருகிறார்.

ஜனவரி 2023-ல் உலகின் மிக மூத்த பெண் என்ற பெருமையைப் பெற்றார். (பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த 118 வயதான லூசிலி ரான்டோன் இறந்துவிட்டார்.)

தற்போது தனது 117வது பிறந்தநாளை காப்பகத்தில் தனது உறவினர்கள் மற்றும் நட்புகளுடன் கொண்டாடினார்.

இது தொடர்பாக பேசிய, மருத்துவ காப்பக செவிலியர் ஈவா கேரேரா, மூதாட்டிக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். அவரின் ஆரோக்கியத்தைக் கண்டு பலர் வியக்கின்றனர். இந்த சிறந்த நாளை மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடினார்.

காது கேளாமை மற்றும் உடல் இயக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு அப்பால், மரியாவிற்கு உடல் அல்லது மனநல பிரச்னைகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com