ஆஸ்கர் விருது விழா: எங்கு? எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்?

ஆஸ்கரின் பிரம்மாண்ட அரங்கம்: காணலாம் கலையுலகின் கொண்டாட்டம்
கோப்புப் படம்
கோப்புப் படம்AP

ஹாலிவுட் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஆஸ்கர் விருதுகள் குறித்த எதிர்பார்ப்பு ஆண்டின் தொடக்கம் முதலே அதிகரிக்க தொடங்கியது.

96-வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 10-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. (இந்திய நேரப்படி மார்ச் 11 அதிகாலை 5:30)

4-வது முறையாக ஜிம்மி கிம்மல் ஆஸ்கர் நிகழ்வை இந்தாண்டும் தொகுத்து வழங்கவுள்ளார்.

அமெரிக்க தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஆஸ்கர் நடைபெறவிருப்பதால் ஆஸ்கர் நிகழ்வில் தனக்கான தலைப்பு அமெரிக்க தேர்தலாக இருக்கலாம் என அசோசியேடட் பிரஸுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார் ஜிம்மி கிம்மல்.

சிறந்த பாடல்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இசைக் கலைஞர்கள் ஆஸ்கர் விருது மேடையில் நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.

ஆஸ்கர் சிலைகள்
ஆஸ்கர் சிலைகள்AP

கடந்த ஆண்டு விருது வென்றவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். அது வழக்கமாக நடக்கக் கூடியது.

கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓபன்ஹைமர்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது. நோலன் சிறந்த இயக்குநர் பிரிவில் முதன்முறையாக பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பார்பி’ படம் 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கன் பிக்சன், அனடாமி ஆப் ஃபால், பார்பி, த ஹோல்ட்ஓவர்ஸ், கில்லர்ஸ் ஆப் த பிளவர் மூன், மாஸ்ட்ரோ, ஓப்பன்ஹெய்மர், பாஸ்ட் லிவ்ஸ், பூர் திங்ஸ், த ஜோன் ஆப் இன்ட்ரஸ்ட் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்கான பரிந்துரையில் உள்ளன.

இவற்றில் பிரான்ஸை சேர்ந்த ‘அனாடமி ஆப் ஃபால்’ மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ‘த ஜோன் ஆப் இன்ட்ரஸ்ட்’ ஆகிய இரண்டும் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழியில் உருவான படங்கள்.

2001-க்கு பிறகு முதன்முறையாக தற்போது புதிய பிரிவு ஒன்று ஆஸ்கரில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறந்த நடிப்பு இயக்குநர் (காஸ்டிங்) பிரிவுக்கான முதல் கோப்பை 2026-ல் வழங்கப்படும் என அகாதமி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com