பிரான்ஸ் அரசியல் சாசனத்தில் 
கருக்கலைப்பு உரிமை

பிரான்ஸ் அரசியல் சாசனத்தில் கருக்கலைப்பு உரிமை

பிரான்ஸில் கருக்கலைப்பு செய்துகொள்வதை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டத் திருத்தம்
Published on

பிரான்ஸில் கருக்கலைப்பு செய்துகொள்வதை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டத் திருத்தம், அந்த நாட்டு அரசியல் சாசனத்தில் வெள்ளிக்கிழமை பொறிக்கப்பட்டது.

இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், 19-ஆம் ஆண்டு அச்சு இயந்திரத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் அந்த சட்டத் திருத்த வாசகங்களை நீதித் துறை எரிக் டியூபாண்ட்-மொரேட்டி பொறித்தாா் (படம்). அமெரிக்காவில் சா்ச்சைக்குரிய விவகாரமாக இருக்கும் கருக்கலைப்பு, ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் சட்டபூா்வமானதாகும். இருந்தாலும், கருக்கலைப்பு என்பதை அரசியல் சாசன அடிப்படை உரிமையாக பிரான்ஸ்தான் உலகிலேயே முதல்முறையாக அங்கீகரித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com