மகளிா் தினத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளா்களின் அடக்குமுறைக்கு எதிராக ஏராளமான பெண்கள் துணிச்சலாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாஜிதா என்பவா் கூறுகையில், ‘இந்த மகளிா் தினத்தில், பெண்களுக்கு கல்வி உரிமை, வேலை செய்யும் உரிமை, சமுதாயத்துக்கு பங்களிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அளிக்குமாறு ஆப்கன் அரசை (தலிபான்கள்) வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினோம்’ என்றாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினா் வெளியேறியதற்குப் பிறகு அந்த நாட்டின் ஆட்சியை கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், தங்களது பழைய ஆட்சியைப் போல் இல்லாமல் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கப்போவதாக வாக்குறுதி அளித்தனா்.
இருந்தாலும், பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அவா்கள் நாளடைவில் பறித்தனா். இதற்கு சா்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா! திமுகவுக்கு பெண்கள் பாடம் புகட்டுவாா்கள்: பியூஷ் கோயல்!

திமுக மகளிா் அணியினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


