பாலியல் துன்புறுத்தல்: ஸ்குவிட் கேம் நடிகருக்கு 8 மாதம் சிறை!

கோல்டன் குளோப் விருது நடிகருக்கு கடும் சிறை தண்டனை
ஓ யோங்-சு
ஓ யோங்-சுNetflix

உலக புகழ்பெற்ற இணைய தொடரான ஸ்குவிட் கேமில் நடித்த ஓ யோங்-சு என்பவருக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் 8 மாதம் சிறைத் தண்டனை தென்கொரிய நீதிமன்றம் விதித்துள்ளது.

நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற கொரிய தொடரான ‘ஸ்குவிட் கேமில்’ நடித்தவர் ஓ யோங்-சு.

அந்த கதாபத்திரத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது பெற்றார். இந்த விருதை பெறும் முதல் தென் கொரிய நடிகர் இவர்தான்.

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் தகவல்படி, சுவோன் மாவட்ட நீதிமன்றம் ஓ யோங்-சுவுக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

79 வயதான ஓ யோங்-சு, இரண்டு முறை பாலியல் துன்புறுத்தல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தில் உண்மைத்தன்மை இருப்பதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2017-ல் கொரியாவின் கிராமப்புற பகுதியொன்றில் நாடகத்துக்காக அவர் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

2022-ல் அடையாளம் தெரியாத பெண்ணை 2 நிகழ்வுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யவிருப்பதாக ஓ யோங்-சு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 7 நாள்கள் மேல்முறையீட்டுக்கான அவகாசம் நீதிமன்றத்தில் அளிக்கப்படும்.

தென்கொரிய சினிமா துறையில் பலர் மீது இதுபோன்ற பாலியல் ரீதியான குற்றச்சாட்டு வெளிவருவது அடிக்கடி நிகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com