
அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் ‘தி எராஸ் டூர்’ இசை நிகழ்ச்சி படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற இசை நிகழ்வுகளின் தொகுப்பான எராஸ் டூர், ஒட்டுமொத்தமாக 261 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்தது. இந்திய மதிப்பில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.
படமாக வெளியான எராஸ் டூரில் இல்லாத ‘கார்டிகன்’ மற்றும் நான்கு பாடல்கள் ஓடிடி வெர்சனில் இடம்பெற்றுள்ளதாக டெய்லர் ஸ்விப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பலத்த போட்டிக்கு நடுவே ஓடிடி உரிமையை 75 மில்லியன் டாலர் கொடுத்து டிஸ்னி நிறுவனம் கைப்பற்றியது.
இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டெய்லரின் எராஸ் டூர் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.