ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

ஸ்லோவாகியா பிரதமர் மீது குற்றச்சாட்டு: சந்தேக நபரின் வீட்டில் சோதனை
ஸ்லோவாகியா பிரதமர் சிகிச்சை பெறும் பான்ஸ்கா பைஸ்ட்ரிகா பகுதியில் உள்ள மருத்துவமனை
ஸ்லோவாகியா பிரதமர் சிகிச்சை பெறும் பான்ஸ்கா பைஸ்ட்ரிகா பகுதியில் உள்ள மருத்துவமனைAFP
Published on
Updated on
1 min read

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்குச்சூடு நடத்தியதாக கருதப்படும் நபரின் வீட்டில் காவலர்கள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்படும் நபரை பாதுகாப்பு கவசங்கள், ஹெல்மெட் ஆகியவற்றுடன் அழைத்துக்கொண்டு சென்ற அதிகாரிகள் அவர் தனது மனைவியுடன் வசிக்கும் லெவிஸ் நகரில் உள்ள வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

சில மணி நேரங்களுக்கு நீடித்த சோதனையின் முடிவில் அங்கிருந்து கணினி மற்றும் சில ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் காரணத்திற்காக நடைபெற்ற இந்த கொலை முயற்சியில் கைது செய்யப்பட்டவர் 71 வயதான முன்னாள் தனியார் பாதுகாப்பு வீரர் என்றும் அவரது பெயர் ஜுரஜ் சிண்டுலா என்பதும் செய்திகளில் கசிந்துள்ளது.

பிரதமரின் நினைவு திரும்பி அவரால் பேச முடிந்தாலும் அவர் நிலை மோசமாக இருப்பதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த நகர்வுகள் தொடர்பாக திங்கள்கிழமை மருத்துவ கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சில வாரங்களில் ஐரோப்பிய தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் மற்ற பிராந்தியங்களில் வன்முறை நிகழ்வுகள் ஏற்பட காரணமாகலாம் என அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com