
ஈரான் அதிபர் ரய்சி பயணித்த ஹெலிகாப்டர், ஞாயிற்றுக்கிழமை "மோசமான வானிலைக் " காரணமாக வனப்பகுதியில் தரையிறங்கியது", என்று செய்தி வெளியிட்டுள்ள ஈரான் அரசு தொலைக்காட்சி, அதிபா் ரய்சியின் நிலை குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
அராஸ் நதியில் ஈரான் மற்றும் அஜா்பைஜான் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவ்வுடன் சேர்ந்து அணையைத் திறந்து வைப்பதற்காக ரய்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அஜர்பைஜானுக்கு வந்திருந்தார்.
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனா்.
அப்போது வழியில், ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணத்தில் மோசமான வானிலை நிலவியது.
இதையடுத்து, தலைநகா் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கி.மீ. கி.மீ. (375 மைல்) தொலைவில் அஜா்பைஜான் நாட்டு எல்லையில் அமைந்த ஜோல்ஃபா நகா் அருகிலுள்ள வனப்பகுதிக்கு நடுவே ஹெலிகாப்டா் தரையிறக்கப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரய்சியின் நிலை குறித்து எந்த தகவலும் அந்நாட்டு அரசு தரப்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.மீட்புக்குழுவினர் அந்த இடத்தை அடைய முயன்றனர், ஆனால் காற்றுடன் பலத்த மழை மற்றும் பனிமூட்டம் காணப்படுவதால், சம்பவ இடத்தை அடைவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிடம் பல்வேறு ஹெலிகாப்டர்கள் இருந்தாலும், சர்வதேச தடைகள் இன்றைக்கான நவீன உதிரிபாகங்களைப் பெறுவது கடினமாக உள்ளது. அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டா்கள் 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்டவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.