
மேற்குக் கரையின் வடக்கு நகரமான ஜெனினில், இஸ்ரேல் ராணுவத்தின் போர் நடவடிக்கையில் குறைந்தது 7 பாலஸ்தீனர்க்ள் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 9 பாலஸ்தீனர்கள் காயமுற்றதாகவும் அவர்களில் இருவர் நிலை மோசமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஜெனின் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கொல்லப்பட்டதாகவும் ஒரு ஆசிரியர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழு, இஸ்ரேல் சிறப்புப் படைகளுடன் மேற்குக் கரை நகரான ஜெனினில் மோதலில் ஈடுபட்டு வருகிறது. செய்தி நிறுவனங்கள் அளிக்கும் தகவல்படி அவர்கள் வெடிக்கக் கூடிய கருவிகளை பயன்படுத்துவதாகவும் தெரிகிறது.
இஸ்ரேல் ராணுவம், ஜெனின் நகரில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் வலுவாக உள்ளதாக கருதுகிறது. காஸாவில் போர் தொடங்கியதுமுதல் இந்த பகுதியில் ராணுவத்தின் சோதனைகள் அடிக்கடி நடந்துவருகின்றன.
அக்.7 போர் தொடங்கியதிலிருந்து மேற்குக் கரையில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.