மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

நாள்தோறும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்AP/ Jeff Chiu

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாள்தோறும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையை விட நாள்தோறும் கஞ்சா எடுத்து கொள்பவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக அதிகரித்துள்ளதுதெரியவந்துள்ளது.

கஞ்சா, மருத்துவ மற்றும் கேளிக்கைக்கான ஒன்றாக கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பாலான அமெரிக்க மாகாணங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2022-ம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாள்தோறும் அல்லது ஒரு நாளுக்கு நெருக்கமான இடைவெளியில் கஞ்சா எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை சுமார் 1.77 கோடி என்றும் அதே இடைவெளியில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை 1.47 கோடி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

1992-ல் நாள்தோறும் கஞ்சா எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது.

இந்த ஆய்வு மேற்கொண்ட கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் கஞ்சா சார்புடைய கொள்கைகள் பாட ஆய்வாளர் ஜோனாத்தன் கால்கின்ஸ், “ஆல்கஹால் பயன்பாடு தற்போதும் விரிவாக இருக்கிறது. ஆனால் கஞ்சா நாள்தோறும் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை இந்தளவுக்கு தீவிரமாக அதிகரிப்பது இதுவே முதல்முறை” என தெரிவித்துள்ளார்.

மேலும், கஞ்சா உபயோகிப்பவர்களில் 40 சதவிகிதம் பேர் நாள்தோறும் எடுத்துக்கொள்பவர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைபொருள் பயன்பாடு மற்றும் ஆரோக்கியம் சார் தேசிய ஆய்வின் தரவுகள் புதன்கிழமை அடிக்‌ஷன் இதழில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் தாமாகவே முன்வந்து தங்களின் போதை பழக்கங்கள் குறித்து மக்கள் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில் இந்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com