கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

கனடாவில் கும்பல் சண்டையில் மூவர் பலி
மாதிரி படம்
மாதிரி படம்ஐஏஎன்எஸ்
Published on
Updated on
1 min read

கனடா மான்ட்ரியல் நகரில் நடந்த கும்பல் சண்டையில் பதின்பருவ சிறுவன உள்பட மூவர் உயிரழந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மான்ட்ரியல் காவல்துறைக்கு அவசர அழைப்புகள் வந்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்தது.

குறைந்தது 15 பேர் கட்டடங்களுக்கு இடையில் உள்ள வீதியில் சண்டை போட்டுள்ளனர். காவலர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த குற்றம் அல்லது ரெளடி கும்பல் தொடர்புடைய சண்டை இது கிடையாது என காவலர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சண்டையில் 15 வயது சிறுவன் உள்பட மூவர் பலியாகியுள்ளனர். அவர்கள் இந்த சண்டையில் பங்கேற்றவர்கள்தாம் என தெரிவிக்கப்படுகிறது.

மான்ட்ரியலில் கடந்த பத்து நாள்களில் இது 7 வது கொலைச் சம்பவம். 14, 15, 16 -ஆக பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சிடிவி செய்திகள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com