பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 6 உடல்கள் மீட்பு!

பப்புவா நியூ கினியா பயங்கர நிலச்சரிவில் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது
மீட்புப் பணி
மீட்புப் பணிஏபி
Published on
Updated on
1 min read

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான ஐநா அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 8 மீட்டர் ஆழமுள்ள பாறை குவியலுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்துவருகின்றன.

பப்புவா நியூ கினியாவில் பாதிக்கப்பட்டு இடம்பெயர வேண்டிய நிலையில் 7,849 பேர் உள்ளதாகவும் அவர்களில் 42 சதவிகிதம் பேர் 16 வயதுக்குக் குறைவானவர்கள் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

நிலையற்ற மண் குவியலுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்துவருவதால் மீட்கப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு தேசமான பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்டநிலச்சரிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிருடன் புதையுண்டனா்.

பேரிடரில் சிக்கியவுள்ள பப்புவா நியூ கினியா மக்கள் உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதிகள் மற்றும் உளவியல் ஆதரவு தேவைப்படும் நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரசு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியாவுக்கு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இந்தியா நிதியுதவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com