ராஃபாவில் இஸ்ரேல் படைகள்: பாதுகாப்பான இடம் எதுவுமில்லை!

ராஃபாவில் இஸ்ரேல் படைகள் முன்னேற்றம்: பலர் பலி
இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு தங்கள் முகாமை பார்வையிடும் பாலஸ்தீனர்கள்
இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு தங்கள் முகாமை பார்வையிடும் பாலஸ்தீனர்கள்ஏபி
Published on
Updated on
1 min read

தெற்கு காஸாவின் ராஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள்களுக்கு முன்பாக பலரை பலியாக்கிய பயங்கர தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

நகரத்தின் மையத்தை நோக்கி இஸ்ரேலிய ராணுவம் முன்னேறுவதாக களத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை வான்வழி தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தல் அல்-சுல்தான் நகருக்கு அருகாமை பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் களமிறக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.

பாலஸ்தீன அமைச்சகத்தின் தகவல்படி குறைந்தது 45 பேர் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டது சர்வதேசளவில் விமர்சனத்தை எழுப்பியது.

இது குறித்து விசாரணை நடத்துவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்தார்.

இரண்டு மூத்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் சிறப்பு அமைப்பு, போர் தொடங்கியதுமுதல் ராஃபாவில் இடம்பெயர்ந்தவர்களில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் ராஃபாவில் போர் விரிவாக்க அறிவிப்பு வந்தவுடன் இடம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளது.

குண்டுவெடிக்கும் பகுதிகளுக்கு மத்தியில் பாதுகாப்பான இடம் என எதுவுமில்லை, உணவு, குடிநீர் பற்றக்குறை, குப்பை குவியல் மற்றும் வாழ்வதற்கான சூழல் இல்லாத நிலை நீடிக்கிறது என ஐநா அமைப்பு எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com