அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் களமிறங்கிய டிரம்ப்!

அதிபர் தேர்தலில், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் களமிறங்கியிருந்தார் டிரம்ப்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்Alex Brandon
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அந்நாட்டின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன்தான் அவர் இந்த தேர்தல் களத்தில் இறங்கினார்.

பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் அரிசோனா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஏற்கனவே, 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக இருந்தபோதும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை கடுமையாகப் பின்பற்றி பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் களமிறங்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

இவரது வெற்றி அமெரிக்கர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்தாலும், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர் மற்றும் அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு வெளிநாடுகளில் இயங்கி வரும் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

டிரம்ப்
டிரம்ப்Alex Brandon

வெற்றியைத் தொடர்ந்து, புளோரிடா மாகாணத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், நாம் புதிய வரலாற்றைப் படைத்துள்ளோம், இது அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரிய வரலாற்று வெற்றி. எண்ணில் அடங்காத தடைகளைக் கடந்துதான் நான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியாக நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியடைந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் வெளியாகி வருகின்றன. டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், அவருக்கு வாக்களித்தவர்கள், அவரது வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

என்னை நம்பி வாக்களித்த உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும், உங்கள் எதிர்காலத்துக்காகவும் நான் பாடுபடுவேன். எனது ஒவ்வொரு நாளும், இனி உங்களுக்காகத்தான், மிக பலம் வாய்ந்த, மகத்தான நாடாக அமெரிக்க மாறும்வரை நான் ஓய்வெடுக்கவே மாட்டேன் என்று சூளுரைத்தார்.

பொதுவாகவே, மற்ற நாடுகளில் நடக்கும் பொதுத் தேர்தலைகள் போல அமெரிக்க தேர்தலை யாரும் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் இருக்கிறது, உலகின் போலீஸ்காரர் என்றுதான் அமெரிக்க அதிபர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதாவது, அமெரிக்க தலைமைப் பதவியில் யார் இருக்கிறார்களோ, அவர்கள் என்னென்ன முடிவுகள் எடுப்பார்களோ, எந்த நாட்டுடன் நட்பு பாராட்டுவார்கள், எந்த நாட்டுடன் சண்டையிடுவார்கள் என்பதைப் போறுத்தெல்லாம் அடுத்தக்கட்ட உலக நகர்வுகள் இருக்கும் என்பதால்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏற்கனவே, உலகில், பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னமும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.