வெற்றிக்கு அருகில் டிரம்ப்! கமலா தொடர் பின்னடைவு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 247 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிக்கு அருகில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 214 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் கிட்டத்திட்ட 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், டிரம்ப் தொடர் முன்னிலையில் உள்ளார்.
அதிபரை முடிவு செய்யும் போர்க்கள மாகாணங்களான வடக்கு கரோலினா, விஸ்கான்சின், ஜாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
50 மாகாணங்களில் 538 பிரதிரிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. பகல் 12.15 மணி நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 247 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 214 வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 51.2%, கமலா 47.4% பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க : ஆசிய பங்குச் சந்தைகள் உயர்வு! அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமா?
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் பென்சில்வேனியாவில் உள்ள 19 தொகுதிகளிலும், மிஷிகனில் உள்ள 15 தொகுதிகளிலும், அரிஸோனாவில் உள்ள 11 தொகுதிகளிலும் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
மேலும், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி 15-க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே தற்போதைய நிலவரப்படி முன்னிலையில் இருப்பதால் வெற்றிக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.