அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் முன்னிலை!

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல்
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார்; ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவில் இருப்பதாகத் தெரிகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, ஓக்லஹோமா, மிஸௌரி, டென்னிஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, தெற்கு கரோலினாவில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வெர்மோன்ர், மேரிலாண்ட், மசாசுசெட்ஸ், கொலம்பியாவில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பிலும், முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனா். தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹாரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தார். இருந்தபோதிலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, வடக்கு கரோலினா, அரிஸோனா, நவாடா போன்ற போர்க்கள மாகாணங்கள்தாம் உண்மையில் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவையாக உள்ளன. இந்த மாகாணங்களில் டிரம்ப்புக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மொத்தம் 535 எம்.பி.க்கள் உள்ளனா். அவா்களில் 435 போ் கீழவையைச் சோ்ந்தவா்கள். 100 போ் மேலவையைச் சோ்ந்தவா்கள். இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 535 பிரதிநிதிகள், கொலம்பியா மாவட்டம் (இந்த மாவட்டத்துக்கு கீழவையில் பிரதிநிதிகள் இல்லை) சார்பாக தனியாக 3 பிரதிநிதிகள் என 50 மாகாணங்களில் மொத்தம் 538 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவா்.

எவ்வளவு வாக்குகள் தேவை?

பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு அந்த மாகாணத்தில் உள்ள அனைத்துப் பிரதிநிதிகள் வாக்குகளும் வழங்கப்படும். உதாரணத்துக்கு ஒரு மாகாணத்தின் வேட்பாளா் 50.1 சதவிகித வாக்குகளைப் பெற்றால், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் 40 பிரதிநிதிகள் வாக்குகளும் அந்த வேட்பாளருக்கே கிடைக்கும்.

பொதுமக்கள் வாக்களித்த பின்னா், பிரதிநிதிகளும் வேட்பாளா்களுக்கு வாக்களிப்பா். மொத்தம் 538 பிரதிநிதிகளில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் (270) எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்களோ, அந்த வேட்பாளரே அதிபா் தோ்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் பிரதிநிதிகள் வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றம் எண்ணும். அதன் பின்னா் வெற்றியாளா் அறிவிக்கப்படுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.