உலகம்
‘ஜிபிஎஸ்-ஐ முடக்கும் வடகொரியா’
ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா குற்றஞ்சாட்டியது.
எல்லைப் பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக தடை ஏற்படுத்துவதாக வட கொரியா மீது தென் கொரியா சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
இது குறித்து அந்த நாட்டு முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் எல்லை நகரான கேசாங்கிலிருந்தபடி தென் கொரியா பகுதியில் ஜிபிஎஸ் சமிக்ஞைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும், இதனால் ஏராளமான பயணிகள் விமானங்களின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.