
ரஷிய தலைநகர் மாஸ்கோ நகரின் மீது பறந்த உக்ரைன் ராணுவத்தின் 34 டிரோன்கள் இன்று (நவ. 10) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைசச்கம் தெரிவித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரில், ரஷிய தலைநகர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள தீவிர தாக்குதலாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரோன் தாக்குதல்களில் மாஸ்கோவில் 2 வீடுகள் தீக்கிரையாகியத்தாகவும், 52 வயது பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ மண்டலத்தில் செயல்படும் 3 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மாஸ்கோவை தவிர்த்து, ரஷியாவின் பிற பகுதிகளிலும் பறந்த உக்ரைன் ராணுவத்தின் 36 டிரோன்கள் உள்பட மொத்தம் 70 உக்ரைன் டிரோன்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலான 3 மணி நேரத்திற்குள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைசச்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.