
மத்திய மெக்சிகோவில் மதுக்கடை பாரில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள்.
மத்திய மெக்சிகோவின் குரேடரோவில் உள்ள மதுக்கடை பாரில் சனிக்கிழமை , நான்கு பேர் கொண்ட குழு உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றன்ர். இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
நகரின் பொதுப் பாதுகாப்புத் தலைவரான ஜுவான் லூயிஸ், இந்தத் தாக்குதலையும், பலியானவர்களின் எண்ணிக்கையையும் உறுதிப்படுத்தினார்.
தாக்குதலைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
தாக்குதலுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, குரேடரோவின் ஆளுநர் மொரிசியோ குரி தனது எக்ஸ் தளத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று உறுதியளித்தார்.
மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.