பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் திருமணச் சட்டத்தில் வயதைக் குறைக்கும் வகையிலான திருத்தங்களை இராக் அரசு நிறைவேற்ற உள்ளது.
இதன்மூலம் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் வயது 9ஆக நிறைவேற்றப்படவுள்ளது. மேலும், பெண்களுக்கான விவாகரத்து, குழந்தை பராமரிப்பு மற்றும் பரம்பரை உரிமையை பறிக்கும் வகையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டங்களில் உள்ள கடுமையான வழிமுறைகளை மேற்கோள்காட்டி இந்தச் சட்டத் திருத்தங்களை இராக் அரசு மேற்கொள்ளவுள்ளது.
மேலும், இந்த மசோதாவானது, குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்க மத அதிகாரிகளையோ அல்லது நீதித் துறையையோ தேர்வு செய்ய வழிவகுக்கிறது.
பெண்கள் அமைப்பு எதிர்ப்பு
பெண்களை முறைகேடான உறவுகளிலிருந்து பாதுகாப்பதாகக் கூறி, இராக்கில் ஆட்சி செய்துவரும் ஷியா பிரிவு தலைமையிலான பழமைவாத அரசாங்கம் இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது.
இராக்கில் பெண்கள் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களும் இராக்கின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்க் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் இராக் அரசு ஈடுபட்டு வருகிறது.
1959 இல் இச்சட்டம் (சட்டப் பிரிவு 188) அறிமுகப்படுத்தப்பட்டபோது மேற்கு ஆசியாவில் மிகவும் முற்போக்கான சட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இது இராக்கிய குடும்பங்களை அவர்களின் மதப் பிரிவைப் பொருட்படுத்தாமல் ஆளுகை செய்வதற்கான ஒரு விரிவான விதிகளை வழங்கியது. தற்போது அதில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இதையும் படிக்க | முதல் நாளில் என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.