காலநிலை மாற்ற நடவடிக்கைகள்: ஜி-20 நாடுகளுக்கு கோரிக்கை!

ஜி-20 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதிகரிக்க வேண்டும்
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு AP
Published on
Updated on
1 min read

ஜி-20 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, செளதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் உறுப்பினர்கள் காலநிலை நடவடிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நேற்று (நவ. 11) தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், காலநிலைமாற்ற அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

சக்திவாய்ந்த நாடுகள் பங்கேற்கவில்லை

75க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் இந்த காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட நாடுகளில் தலைவர்கள் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவில்லை.

ஐ.நா. காலநிலை மாற்றத் தலைவர் சைமன் ஸ்டெயில் இது தொடர்பாக கூறியதாவது,

''காலநிலை மாற்றத்துக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பு எண்ணிக்கையில் குறையவில்லை என்று நம்புகிறேன்.

காலநிலை மாற்றத்துக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பில் முன்னேறிய பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை குறிப்பிடத்தகுந்த முயற்சிகளை எடுக்கின்றன.

இதேபோன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப முயற்சிகளை மேற்கொண்டாலும், முக்கிய காலநிலை ஒப்பந்தங்களில் இவர்களின் சீரற்ற ஈடுபாடு கவலை அளிப்பதாக உள்ளது.

உலகளாவிய தெற்கில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை காலநிலை நடவடிக்கைகளில் முக்கிய ஒப்பந்தங்களில் தீவிரமாக பங்கேற்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக உள்நாட்டில் நியாயமான முயற்சிகளை மேற்கொள்வதாக ஆய்வு முடிவுகளிலும் தெரியவந்துள்ளது.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் நாடுகள் துறைசார் வலிமையை மேம்படுத்தி, காலநிலை நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | நவ.16-ல் பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில் நாடுகளுக்கு பயணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com