அதிபர் டிரம்ப் ஆட்சியில் இருந்து விலக்கு..! புதிய சலுகையை அறிவித்த கப்பல் நிறுவனம்!

அதிபர் டிரம்ப் ஆட்சியில் இருந்து விலக்கு அளிப்பதாக அமெரிக்கர்களுக்கு புதிய சலுகையை கப்பல் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் இருந்து விலகிச்செல்ல விரும்புவோருக்கு சுற்றுலா நிறுவனம் ஒரு புதிய சலுகைத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் விலகிச்செல்ல விரும்புவோருக்கு உலகளவில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்கலாம் என்று சுற்றுலா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் ஆகும். இந்தப் பயணத்திட்டத்திற்கு 4 வருடத்திற்கான பணத்தை முன்பணமாக செலுத்திய பின்னர், இருவர் தங்கும் அறைக்கு 1,59,999 அமெரிக்க டாலர்களும், ஒருவருக்கு 2,55,999 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரத்தன் டாடாவின் முதல் காதல்! முறிந்தது எப்படி?

தற்போதைய அரசியல் சூழலில் இருந்து விலகிச்செல்ல விரும்புவோருக்கு இந்தப் பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமூகமான, கவலைகள் அற்ற சூழல் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘வில்லா வீ ஒடிஸி’ என்ற நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் கூறுகையில், “ஒருமுறை பணம் செலுத்துங்கள், மீண்டும் அதைப் பற்றி கவலைப்படவேண்டாம். நீங்கள் கப்பலில் காலடி எடுத்து வைத்தவுடன், உங்கள் பயணம் தொடங்குகிறது. உலகின் மிகச் சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களுக்குச் செல்லும்போது, ​​வழக்கமானவற்றை விட்டுவிட்டு, தெரியாதவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

முதல் நாளில் என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?

இந்தத் திட்டம் குறித்து வில்லா வீ நிர்வாக செயல் இயக்குநர் மைக்கெல் பீட்டர்சன் கூறுகையில், “தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூறியிருந்தாலும், எக்ஸ்ஒய்இசட் (டிரம்ப் பெயரை குறிப்பிடாமல்) தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்களுக்கான சரியான பயணத்திட்டம் எங்களிடம் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.

எங்களுக்கு அரசியல் ரீதியில் பல்வேறு பார்வைகள் இருக்கின்றன. ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகை ஆராய்வதற்கான ஆர்வத்தின் மூலம் நமது சமூகம் ஒன்றிணைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

இந்த தொகுப்பில் நேரடியாக அதிபர் டிரம்பைப் பற்றி குறிப்பிடவில்லை என்றாலும், ஆனால் முன்னர் அரசியல் ரீதியாக தெரிவித்திருந்த திட்டங்களுடன் இது ஒத்திருக்கிறது. 'மிட்-டெர்ம் தேர்வு' எனப்படும் இரண்டு ஆண்டு தொகுப்பு, 2026ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள், சேமிப்புகள் குறித்து கவலைப்படுபவர்களுக்காக ஒரு ‘எண்ட்லெஸ் ஹொரைசான்ஸ்’ என்ற தொகுப்பையும் வில்லா வீ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா அமெரிக்க அதிபர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com