புக்கர் பரிசை வென்றார் சமந்தா.! விண்வெளிசார் நூலுக்கு முதல்முறையாக புக்கர் பரிசு

சமந்தா ஹார்வேக்கு 2024-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு..
புக்கர் பரிசை வென்றார் சமந்தா.! விண்வெளிசார் நூலுக்கு முதல்முறையாக புக்கர் பரிசு
AP
Published on
Updated on
1 min read

லண்டன்: சமந்தா ஹார்வேக்கு 2024-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது படைப்பான ‘ஆர்பிட்டல்’ என்ற நாவலுக்காக சமந்தா ஹார்வே(49) கௌரவிக்கப்பட்டுள்ளார்.

விண்வெளித்துறை சார்ந்ததொரு நூலுக்கு இத்தகைய கௌரவம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும். பிரிட்டனில் இந்தாண்டு அதிகம் விற்பனையான புத்தகமும் இதுவே.

அதற்கான முக்கிய காரணம், விண்வெளிக்கு செல்லும் வீரர்களைக் குறித்து இப்புத்தகத்தில் சுவாரசியமாகக் கதை சொன்ன விதம்தான். ‘ஆர்பிட்டல்’ நாவலில் சமந்தா ஹார்வே உள்ளீட்டுள்ள வரிகளை, புக்கர் பரிசு நடுவர் குழு வெகுவாகக் பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள வரலாற்றுப் பாரம்பரியமிக்க ஓல்டு பில்லிங்ஸ்கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா ஹார்வேக்கு புக்கர் பரிசளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரொக்கமாக 50,000 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 54.50 லட்சம்) தொகையையும் பெற்றுள்ளார் சமந்தா ஹார்வே.

AP

24 மணி நேரத்தில் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்பே 136 பக்கங்களை உள்ளடக்கிய ‘ஆர்பிட்டல்’ நாவல்!

முன்னதாக, 1979-ஆம் ஆண்டு பெனெலோப் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய ‘ஆஃப்ஷோர்’ என்ற நாவலுக்காக அவருக்கு புக்கர் பரிசளிக்கப்பட்டது. புக்கர் பரிசு வென்ற நூல்களில் குறைந்த பக்கங்களைக் கொண்ட நாவலாக ‘ஆஃப்ஷோர்’ திகழ்கிறது. 132 பக்கங்களில் இந்நாவலை படைத்திருப்பார் எழுத்தாளர் பெனெலோப் ஃபிட்ஸ்ஜெரால்ட்.

இதற்கு அடுத்த இடத்தில், குறைந்த பக்கங்களைக் கொண்ட நாவலாக சமந்தா ஹார்வேயின் ‘ஆர்பிட்டல்’ உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு பின், பெண் எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. புக்கர் பரிசின் கடந்த 55 ஆண்டு கால வரலாற்றில், இந்தாண்டு பெண் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இறுதிப்பட்டியலில் தேர்வான சமந்தா ஹார்வே உள்ளிட்ட மொத்தம் 6 எழுத்தாளர்களில் ஐவர் பெண்கள் ஆவர்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியீடாகும் நூல்களுக்கு, இலக்கியத் துறையின் உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘புக்கர் பரிசு’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com