பாகிஸ்தானில் ராணுவ தளபதி உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஆப்கானிஸ்தானின் எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடு பற்றி..
 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதி, 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள கைபர் மாவட்டத்தின் தீரா பள்ளத்தாக்கில் உள்ள லூர் மௌதான் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த நடவடிக்கையின் போது 6 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துப் பல தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள சரணாலயங்களிலிருந்து செயல்படுவதாகப் பாகிஸ்தான் அரசு பலமுறை குற்றம் சாட்டி வருகிறது.

2021 ஆம் ஆண்டில் காபூலில் தலிபான்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com