பாலஸ்தீன இளைஞரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படை!

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையோரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாலஸ்தீனத்தில் நுழந்த இஸ்ரேல் படை
பாலஸ்தீனத்தில் நுழந்த இஸ்ரேல் படைIANS
Published on
Updated on
1 min read

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையோரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேற்கு கரையின் நபுலஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்து சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது தொடர்பாக பாலஸ்தீன சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

''நபுலஸ் பகுதி அருகேவுள்ள அல் மசாகென் அல் ஷ பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 18 வயதுடைய நெளர் அர்ஃபாட் பலியானார். அவரின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் குண்டுகள் துளைக்கப்பட்டிருந்தது. இவர் உயர்நிலைப் பள்ளி மாணவர்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பாலஸ்தீன கல்வித் துறை மாணவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த கொடூர செயல் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டது.

நபுலஸின் கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டபோது மனித வெடிகுண்டுகள் என நினைத்து மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இந்த மோதலில் நெளர் அர்ஃபாட் பலியானார்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லைகளைக் குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க | வால்மார்ட் ஓவனில் இந்தியப் பெண் சடலம்: கொலை இல்லை என்கிறது கனடா காவல்துறை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.