
இஸ்லாமிய தேசமான இராக்கில் கடைசியாக கடந்த 1987-ஆம் ஆண்டு தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1997-ஆம் ஆண்டில் வடக்குப் பகுதியிலுள்ள 3 மாகாணங்களை தவிர்த்து இராக்கின் பிற பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இராக்கில் தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு 37 ஆண்டுகளுக்குப்பின் இன்று தொடங்கியுள்ளது.
இராக்கின் மொத்த மக்கள் தொகை சுமார் 44.5 மில்லியன் என்று அந்நாட்டின் திட்டத்துறை அமைச்சக இயக்குநர் அலி அரியன் சலே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இப்போது நடத்தப்பட்டு வரும் மகக்ள் தொகை கணக்கெடுப்பில், குர்தீஷ், அரபுக்கள், துருக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அங்குள்ள் சிறுபான்மையின மக்களையும் உள்ளடக்கி வெளிப்படைத்தன்மையுடன் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.