உக்ரைனின் அண்டை நாட்டில் அதிபர் தேர்தல்! கள நிலவரம் என்ன?

உக்ரைனின் அண்டை நாட்டில் அதிபர் தேர்தல்: ரோமானியாவில் வாக்குப்பதிவு!
மார்கெல் சியோலாகு (ரோமானியா பிரதமர்)
மார்கெல் சியோலாகு (ரோமானியா பிரதமர்)AP
Published on
Updated on
1 min read

ரோமானியாவில் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று(நவ. 24) நடைபெறுகிறது. ரோமானிய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 9 மணியுடன் நிறைவடையும். டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

நேட்டோ கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருக்கும் ரோமானியாவில், உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, அண்டை நாடான உக்ரைனில் நீடிக்கும் சண்டை உள்ளிட்ட விவகாரங்கள் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமென அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தும் வலதுசாரி தலைவரான ஜார்ஜ் சிமியோனுக்கு சாதகமாகவே அமையும் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.

ரோமானிய பிரதமரும் ‘ஷோசியல் ஜனநாயகக் கட்சி(பிஎஸ்டி)’ தலைவருமான மார்கெல் சியோலாகு தலைநகர் புச்சாரெஸ்ட் நகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று(நவ. 24) வாக்குப்பதிவு செய்தார்.

அந்நாட்டின் அதிபராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் ‘க்ளாஸ் லோஹன்னிஸ்’ உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். உக்ரைனுடன் சுமார் 650 கி.மீ. தொலைவுக்கு எல்லையை ரோமானியா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

AP

ஐரோப்பா எங்கிலும் வலதுசாரிக் கட்சிகள் பரவலாக எழுச்சி பெற்றுவரும் நிலையில், ரோமானியாவிலும் சிமியோன் பக்கம் ஆதரவு அலை வீசுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு, தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று சொல்லிக்கொள்ளும் சிமியோன், டிரம்ப்பின் பாவனையிலேயே சிவப்பு நிற தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் உண்டு. உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதை எதிர்ப்பவரும்கூட.

அண்மையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிவாகை சூடிய நிலையில், அவரது பாணியில் ரோமானியாவில் சிமியோன் வெற்றிக்கொடியை நாட்டுவாரா என்பதற்கான விடை அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

அதிபர் போட்டியில் சற்று பின்தங்கியிருக்கும் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான பத்திரிகையாளர் எலேனா லாஸ்கோனிக்கும் வெற்றி வாய்ப்பில்லை என திட்டவட்டமாக மறுக்க முடியாத குழப்பமான அரசியல் சூழலே ரோமானியாவில் இப்போது நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com