இஸ்ரேல்-லெபனான் இடையே விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம்.!

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
இஸ்ரேல்-லெபனான் இடையே விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம்.!
AP
Published on
Updated on
1 min read

லெபானானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்பட்டுள்ளார்.

காஸாவில் தொடரும் போரில் பாலஸ்தீன ஹமாஸ் படைக்கு ஆதரவாக, லெபனான் நாட்டிலிருந்தபடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் லெபனான் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அங்கு இதுவரை 3,750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்; 15,626 போ் காயமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி, முதல் இரு மாதங்கள் முற்றிலும் சண்டை நிறுத்தப்படுவதுடன், லெபனானிலிருந்து இஸ்ரேல் படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 18 மைல் தொலைவிலுள்ள லித்தானி ஆற்றின் தெற்குப் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா ஆயுதப்படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும், தெற்கு லெபனானிலுள்ள நகரங்கள் மற்றும் கிரமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இன்று(நவ. 26) ஆலோசனைக் கூட்டம் நடத்தி, போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தையை அமெரிக்க தூதர் அமோஸ் ஹோச்ஸ்டெய்ன் முன்னெடுத்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.