கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கூடுதல் வரி..
கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு
Updated on

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இது குறித்து தனது சமூக ஊடகமான ‘ட்ரூத்’தில் அவா் வெளியிட்டுள்ள பதிவுகளில், வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இந்த மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

மெக்ஸிகோ, கனடா நாடுகளில் இருந்து சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவது நிற்கும்வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்ட அவா், அதைத் தடுத்து நிறுத்த அந்த நாடுகளால் முடியும் என்றாா்.

அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை சீனா தடுக்கும் வரை அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதும் 10 சதவீதம் கூடுதல் வரி சுமத்தப்படுவதாக டிரம்ப் கூறினாா்.

இந்த அறிவிப்புக்கு மூன்று நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இத்தகைய நடவடிக்கைகள் தங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வா்த்தகப் போரை உருவாக்கும் என்று எச்சரித்துள்ள சீனா, அந்தப் போரில் யாரும் வெற்றி பெறமுடியாது என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com