மங்கோலியாவில் உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டு 20% அதிகரிக்கும் என அந்நாட்டு தேசிய பிள்ளியியல் அலுவலக விவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் இன்று (அக். 1) கடைபிடிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் 1990ஆம் ஆண்டுமுதல் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் மூத்த குடிமக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி மங்கோலியா தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்கோலியா நாட்டு மூத்த குடிமக்கள் எண்ணிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மங்கோலியாவில் தற்போது உள்ள மக்கள்தொகையில் 35 லட்சம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 9.8% ஆகும்.
தற்போது உள்ள மூத்த குடிமக்களில் 40.3% ஆண்கள். எஞ்சிய 59.7% பெண்களாக உள்ளனர். மங்கோலியாவில் மிகவும் மூத்தவராக 107 வயது முதியவர் அறியப்படுகிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.