
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலில் 46 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரேலின் எல்லைக்கு அருகே உள்ள கிராமங்களில் மட்டும் அந்நாட்டு ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.
இந்த தாக்குதலில் 46 பேர் பலியானதாக லெபனானின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் 46 பலியானார்கள். 85 பேர் காயமடைந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நடந்த தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
மேலும் பெய்ருட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள புறநகர்ப் பகுதியிலும் இஸ்ரேல் ஏவுகணைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டபோது ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.