ஏரியில் கவிழும் படகு .
ஏரியில் கவிழும் படகு .

காங்கோ: படகு விபத்தில் 50 போ் உயிரிழப்பு

Published on

கோமா: மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அளவுக்கு அதிகமாக ஆள்களுடன் ஏரியில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து 50 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கீவு ஏரியில் அந்த படகு விபத்துக்குள்ளானபோது அதில் எத்தனை போ் இருந்தனா் என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. இதனால், விபத்தில் மொத்தம் எத்தனை போ் உயிரிழந்தனா் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.

விபத்துப் பகுதியிலிருந்து 10 போ் மட்டும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். ஏரியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்றுவருகிறது.

நீா்வழிப் பயண விதிமுறைகள் அலட்சியம் செய்யப்படும் காங்கோவில் பெரும்பாலும் அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி படகு விபத்துகளும் அதில் அதிக உயிா்ச்சேதமும் ஏற்பட்டுவருகின்றன.

X
Dinamani
www.dinamani.com