உணவு டெலிவரி செய்து இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்!

பென்சில்வேனியா மாகாணத்தில் உணவு சமைத்து டெலிவரி செய்த டிரம்ப்.
இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்.
இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்.Evan Vucci
Published on
Updated on
1 min read

மெக் டொனால்டு கடையில் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், புலம்பெயர்ந்த இந்திய தம்பதிக்கு டெலிவரி செய்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்திய தம்பதியும் டிரம்பும் உரையாடும் காட்சி இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

வேலை செய்து டிரம்ப் பிரசாரம்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.

இருவரும் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த டிரம்ப், திடீரென அங்கிருந்த மெக் டொனால்டு கடைக்குள் நுழைந்தார்.

பிரெஞ்சு பிரைஸ் தயாரித்த டிரம்ப்
பிரெஞ்சு பிரைஸ் தயாரித்த டிரம்ப்Doug Mills/The New York Times

அப்போது, சமையல் அறைக்கு சென்ற டிரம்ப், எனக்கு வேலை வேண்டும் என்று கடையின் நிர்வாகியிடம் கேட்டு, பின்னர் உருளைக்கிழங்கு வைத்து பிரெஞ்ச் பிரைஸ் சமைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு உணவை அவரே விநியோகம் செய்துள்ளார். அப்போது, உணவு டெலிவரி வாங்க வந்த இந்திய தம்பதிகள் டிரம்பை பார்த்தவுடன் ஆச்சரியத்துடன் உரையாடினர்.

இந்திய தம்பதி - டிரம்ப் உரையாடல்

டிரம்பை பார்த்த இந்திய தம்பதிகள், வணக்கம் கூறினர். பின்னர், எங்களைப் போன்ற சாதாரண மக்கள் இங்கு இருப்பதை நீங்கள் சாத்தியமாக்கினீர்கள், அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

காரில் உடன் அமர்ந்திருந்த அவரின் மனைவி, எங்களுக்காக குண்டு காயம் வாங்கியதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com