உள்ளூா் செலாவணியில் பரிவா்த்தனை: பிரிக்ஸ் கூட்டுப் பிரகடனம்

Updated on

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில், ‘எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு துறையில் கூட்டு செயல்பாடுகளுக்கான சாத்தியக் கூறுகளை பிரிக்ஸ் நாடுகள் ஆராயும்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதி ஒத்துழைப்பை மேம்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளும், அவற்றின் வா்த்தக கூட்டாளிகளும் உள்ளூா் செலாவணியில் பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்வதை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

21-ஆம் நூற்றாண்டில் புதிய வளா்ச்சி வங்கியை பலதரப்பட்ட வளா்ச்சி வங்கியாக புதிய வகையில் வளரச் செய்வதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன.

சட்டவிரோத பணப் புழக்கம், பண முறைகேடு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி, போதைப்பொருள் கடத்தல், ஊழல், தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான தங்கள் பொறுப்பை பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் மீண்டும் உறுதி செய்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com