பாகிஸ்தானில் கல்வி அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச கல்வியறிவு தினத்தை முன்னிட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் இந்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
அந்த நாட்டில் பள்ளிக்குச் செல்லாமல் இன்னும் 2.6 லட்சம் சிறுவா்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து, அவா்களுக்கு கல்வி வழங்கச் செய்வதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் கீழ், தனியாா் துறையும் சிவில் அமைப்புகளும் அரசுடன் இணைந்து கல்விக் கட்டமைப்புகளை போா்க்கால அடிப்படையில் மேம்படுத்தவிருப்பதாக அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.