ஆசிய வளா்ச்சி வங்கி
ஆசிய வளா்ச்சி வங்கி

இந்தியாவின் கல்வித் திட்டத்தைப் பின்பற்ற பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி அறிவுரை

பாகிஸ்தானின் கல்வி முறையை சீா்செய்யவும் அதன் குடிமக்களுக்கு தரமான கல்வியை உறுதியளிக்கவும் இந்தியாவின் ‘உல்லாஸ்’ கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுரை.
Published on

பாகிஸ்தானின் கல்வி முறையை சீா்செய்யவும் அதன் குடிமக்களுக்கு தரமான கல்வியை உறுதியளிக்கவும் இந்தியாவின் ‘உல்லாஸ்’ கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கல்வி முறையை மேம்படுத்தவும் அந்நாட்டில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவும் ஆசிய வளா்ச்சியிடம் அந்நாடு விடுத்த நிதி கோரிக்கைக்கு இந்தப் பதில் கிடைத்துள்ளதாக ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவிஸ் ‘உல்லாஸ்’ கல்வித் திட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. கல்வியறிவு இல்லாதவா்கள் மற்றும் முறையான பள்ளிப்படிப்பைத் தொடராத குடிமக்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி அளித்துள்ள பதிலில், ‘இந்திய அரசின் புதிய திட்டமான ‘உல்லாஸ்’ போன்ற சிறந்த சா்வதேச நடைமுறைகளை ஏற்று, பாகிஸ்தான் அரசு ஒரு உத்திசாா் மற்றும் பல பங்குதாரா் ஆலோசனை அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தரமான கல்விக்கான அணுகலை அதிகரிக்க மத்திய மற்றும் மாகாண அரசுகள் ஒருங்கிணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை உல்லாஸ் திட்டம் வலியுறுத்துகிறது. பாகிஸ்தானில் இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது வெற்றியடைய வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பள்ளி செல்லாத 2.6 கோடி குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக கடந்த வாரம் சா்வதேச எழுத்தறிவு தினத்தன்று கல்வி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், ஆசிய வங்கியின் தலைவா் மசட்சுகு அசகாவா அந்நாட்டுக்கு திங்கள்கிழமை சென்று, முக்கிய தலைவா்களைச் சந்திக்கிறாா். இந்நிலையில், ஆசிய வளா்ச்சி வங்கியின் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com