பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இன்று(செப். 17) பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, எக்ஸ் தளத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சற்றுமுன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
உலக சவால்களை இணைந்து எதிர்கொள்ள, நம் நட்புறவையும், இத்தாலி - இந்தியா இடையேயான கூட்டாண்மையையும், நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம் எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.