போர் நிறுத்த உடன்படிக்கை: ஹமாஸ் முடிவு விரைவில் தெரியவரும்!

இரு மாத காலத்துக்கான போர் நிறுத்தம் மற்றும் பரஸ்பர கைதிகள் விடுவிப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டம் | AP
இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டம் | AP

காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கிற பிணைக்கதிகளின் விடுவிப்பு ஆகியவற்றுக்கான உடன்படிக்கைக்கு விரைவில் ஹமாஸ் பதிலளிக்கும் என மூத்த ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

அக்.7 அன்று தொடங்கிய போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் பிடியில் 100-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக உள்ளனர்.

காஸாவிலிருந்து திரும்பும் இஸ்ரேல் படை | AP
காஸாவிலிருந்து திரும்பும் இஸ்ரேல் படை | AP

ஹமாஸ் தலைவர் ஒசாமா ஹம்தான், அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டுமானால், போரை நிறுத்துவதும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிப்பதும் தான் ஒரே வழி எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன தலைவர்கள் இருவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார் ஒசாமா.

மர்வான் பர்கவுடி, பல ஆயுள் தண்டனைகள் பெற்றவர். ஒரு தலைமுறைக்கு முன்பு கடுமையான தாக்குதல்களைத் திட்டமிட்டவர்.

பாலஸ்தீனர்களின் விடுதலைக்கான பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர் அஹமத் சதாதையும் விடுவிக்க அவர் கேட்டுள்ளார்.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைவரையும் விடுவிக்க போதுமான பிணைக்கைதிகள் ஹமாஸிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேல் போரை நிறுத்துவது மட்டுமின்றி காஸாவின் மறுகட்டுமானத்திலும் பங்காற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com