
வியட்நாமின் கோன் தும் மாகாணத்தில் புதன்கிழமை தொடர்ந்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கோன் தும் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கம் சுமார் 8.1 கி.மீ ஆழத்தில் பதிவானதாக வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 3.3, 2.8, 2.5 மற்றும் 3.7 ரிக்டர் அளவிலும் 8.01 முதல் 1 கி.மீ வரை ஆழத்தில் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
கோன் ப்ளாங் மாவட்டத்தில் நிலநடுக்கத் தரவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக புவி இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.