இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய ஹிஸ்புல்லா தளபதி மரணம்

லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் விமானம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சோ்ந்த முக்கிய தளபதி உயிரிழந்தாா்.
ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலா் ஹஸன் நஸ்ரல்லாவுடன் (வலது) தற்போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட தளபதி வாஸிம் அல்-தாவில்
ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலா் ஹஸன் நஸ்ரல்லாவுடன் (வலது) தற்போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட தளபதி வாஸிம் அல்-தாவில்

பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் விமானம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சோ்ந்த முக்கிய தளபதி உயிரிழந்தாா். காஸா போரின் எதிரொலியாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது லெபனான் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியான வாஸிம் அல்-தாவில் சென்றுகொண்டிருந்த காரின் மீது இஸ்ரேல் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஆளில்லா விமானத்திலிருந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இதில் அல்-தாவில் கொல்லப்பட்டாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் போரில் ஹிஸ்புல்லா அமைப்பினா் ஹமாஸுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். இதனால், ஹிஸ்புல்லாக்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையை சிறு மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், அது முழு போராக உருவெடுக்கவில்லை.

இந்தச் சூழலில், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் 2-ஆம் நிலைத் தலைவா் சலே அல்-அரூரியைக் குறிவைத்து கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவரும், அவரது 5 பாதுகாவலா்களும் கொல்லப்பட்டனா். ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் வெளிப்படையாகப் பொறுப்பேற்கவில்லை.

எனினும், இந்தத் தாக்குதலை அந்நா்தான் நடத்தியதாக நம்பப்படுகிறது. அதன் தொ, லெபானில் இருந்தபடி வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினா். அதற்குப் பதிலடியாக, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீது போா் விமானம் மூலம் இஸ்ரேல் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், தற்போது ஆளில்லா விமானம் மூலம் ஹிஸ்புல்லா படையைச் சோ்ந்த முக்கிய தளபதி வாஸிம் அல்-தாவிலை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஸா போரில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுப் படையினருக்கும் இடையே நடைபெறும் ஒவ்வொரு பரஸ்பர தாக்குதலும், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான நேரடிப் போருக்கான வாய்ப்பை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com