உலகம்
மியான்மா் உயிரிழப்பு 3,354-ஆக அதிகரிப்பு
மியான்மரில் மாா்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,354-ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர, இந்தப் பேரிடரில் 4,850 போ் காயமடைந்ததாகவும் சுமாா் 220 போ் மாயமாகியுள்ளதாகவும் அரசுக்குச் சொந்தமான குளோபல் நியூ லைட் ஊடகம் சனிக்கிழமை தெரிவித்தது.