அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் கணிப்பு கூறுவதென்ன?!

அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் கணிப்பு கூறுவது பற்றி...
சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் காட்சி..
சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் காட்சி..
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது போலவும் கார்ட்டூன் விடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருபுறம் உலக நாடுகளுடன் வர்த்தக போர், மற்றொருபுறம் உக்ரைன் - ரஷிய போரை முடிவுக்கு கொண்டும் வரும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டிரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற செய்தி உண்மையா? பொய்யா?.. இது நிஜத்தில் நடந்துவிடுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் கணிப்பதில் புகழ்பெற்றது. இந்தக் கணிப்புகள் ஒருபுறமிருக்க வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி அதிபர் டிரம்ப் இறந்துவிடுவார் என்று அந்த கார்டூனில் காட்டப்பட்டிருப்பதாக விடியோ கிளிப் ஒன்றில் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

அந்த விடியோவில் மரணமடைந்த அதிபர் டிரம்ப்பின் உடல், சவப்பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது போலவும், அவரைச் சுற்றி அரசியல் பிரமுகர்கள் சூழ்ந்திருப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சர்ச்சைக்குரிய விடியோ பற்றி சிம்ப்ஸன்ஸ் நிர்வாகத் தலைமை இயக்குநர் மேட் செல்மேன் கூறுகையில், “இந்த விடியோ உண்மையானது கிடையாது. இது இணையவாசிகளால் புனையப்பட்ட விடியோ. 2017 ஆம் ஆண்டிலிருந்தே இதேபோன்று பல்வேறு சர்ச்சையான விடியோக்கள் புனையப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.

டிரம்ப் குறித்து இதுபோன்று விடியோக்கள் பரப்பப்படுவது இது முதல்முறை கிடையாது. கடந்தாண்டு தேர்தல் பிரசாரத்தின் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போதும், ‘ஆழந்த இரங்கல் டிரம்ப் 1946 - 2024’ என்ற வாசகத்துடன் அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் விடியோக்கள் வைரலாகின. என்னதான் தவறான தகவல்களைப் பரப்பினாலும், தி சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக எபோலா வைரஸ் தொற்று, டொனால்ட் டிரம்ப் கைது, கமலா ஹாரிஸ் அமெரிக்க வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது, ஃபிபா விளையாட்டு ஊழல், விர்ச்சுவல் ரியாலிட்டி கண்டுபிடிப்பு, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் உள்ளிட்டவைகளையும் முன்பே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com