தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தலைநகரான சீன தைபேயில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக மத்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சீன தைபேயில் ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் மட்டுமே நீடித்தது. 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு கடற்கரையில் உள்ள இலனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவு நாடான தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. தைவானின் 1999 ஆம் ஆண்டு மிகவும் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,415 பேர் பலியாகினர்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் எந்த உயிர்ச்சேதமோ, பொருள்சேதம் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.