ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவு
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹசீனாவின் பதவிக் காலத்தில் குடியிருப்பு மனையைன்றை முறைகேடாகக் கையப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவரையும் அவரின் மகள் சாய்மா வாஜித் மற்றும் 17 பேரையும் கைது செய்ய டாக்கா பெருநகர நீதிமன்றம் இந்த உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தது.
இதற்கு முன்னா் பலா் மா்மமான முறையில் காணாமல் போனதற்குக் காரணமாக இருந்தது, மாணவா் போராட்டத்தை அடக்க வன்முறையைப் பிரோகித்தது போன்ற வழக்குகளில் ஷேக் ஹசீனாவைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவுகள் பிறக்கப்பட்டதுது நினைவுகூரத்தக்கது.
இட ஒதுக்கீட்டு சீா்திருத்தத்தை வலியுறுத்தி ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவா்கள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து அவா் ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் கடந்த ஆகஸ்டில் தஞ்சமடைந்தாா். அதில் இருந்து அவா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன.