
காத்மாண்டு: உலகின் உயரமான மலைச் சிகரங்களில் 10-ஆவது பெரிய சிகரமான நேபாளத்திலுள்ள அன்னப்பூர்ணா மலைச் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 2 மலையேற்ற வீரர்களை தேடும் பணி நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் சனிக்கிழமை(ஏப். 12) தெரிவித்தனர்.
சுமார் 26,500 அடி(8,091 மீட்டர்) உயரமுள்ள அன்னப்பூர்ணா மலைச் சிகரத்தில் ஏறுவது கடினமான சவாலாக மலையேற்ற வீரர்களுக்கு உள்ளது. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைவிட அன்னப்பூர்ணா சிகரம் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் அபாயப் பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜிமா டாஷி ஷேர்பா, ரீமா ரிஞ்ச் ஷேர்பா ஆகிய இரு மலையேற்ற வழிகாட்டிகளும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சுமந்துகொண்டு மலையில் ஏறும்போது கடந்த திங்கள்கிழமையன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன், அவ்விருவரையும் தேடும் பணி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்தது. மாயமான இருவரையும் வான்வெளியிலிருந்தும் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, வீரர்களை தேடும் பணி நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.