பாகிஸ்தான்: பஞ்சாபில் இருந்து 
10,000 அகதிகள் வெளியேற்றம்

பாகிஸ்தான்: பஞ்சாபில் இருந்து 10,000 அகதிகள் வெளியேற்றம்

இந்த மாதம் மட்டும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
Published on

இந்த மாதம் மட்டும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாகாண காவல்துறை தலைவா் உஸ்மான் அன்வா் கூறுகையில், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவா்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவா். உரிய ஆவணங்களின்றி அவா்கள் தங்கியிருந்தனா் என்றாா்.

பல்வேறு போா்களின்போது ஆப்கானிஸ்தான் நாட்டவா்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது. எனினும், எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் விளைவாக, கடந்த 2023 அக்டோபரில் சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். தற்போது சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை இந்த ஆண்டுக்குள் வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மட்டும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com