ஒரே ஒரு மரப்பெட்டி ஏன்? போப்பின் சவப்பெட்டியில் என்னென்ன வைக்கப்படும்?

போப்பின் சவப்பெட்டியில் என்னென்ன வைக்கப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள்.
போப் இறுதி அஞ்சலி
போப் இறுதி அஞ்சலி
Published on
Updated on
1 min read

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு தொடங்கியது. செயிண்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் இறுதிச் சடங்கும், ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மாகியோரே பசிலிகாவில் உடல் நல்லடக்கமும் செய்யப்படவிருக்கிறது.

முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை இறுதிச் சடங்கு முடிந்ததும் அவரது விருப்பத்தின்படி புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

போப் பிரான்சிஸ் உடல்நலம் குறைந்து சிகிச்சைபெற்று வந்தபோதே, தனக்கு மிக எளிமையான முறையில் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடல் ஒரே ஒரு மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

வழக்கமாக, பாரம்பரிய முறைப்படி, மூன்று வகையான சவப்பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று வைத்து நல்லடக்கம் செய்வது வழக்கம். அதாவது, ஊசி இலை மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டி, எஃகு சவப்பெட்டி, ஓக் மரத்தால் ஆன பெட்டிகள் என மூன்று பெட்டிகளுக்குள் ஒன்றன் உள் ஒன்று வைத்து நல்லடக்கம் செய்யப்படுவது வழக்கமாம்.

Markus Schreiber

கைதட்டும் மக்கள்

போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தவரை, அப்பகுதியே இருண்ட அமைதியில் காத்திருந்த நிலையில், புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்த கூட்டம், போப்பாண்டவரின் சவப்பெட்டி ஊர்வலமாக வெளியே கொண்டு வரப்பட்டபோது கைதட்டத் தொடங்கினார்கள். இதுவும் அவர்களது பாரம்பரிய வழக்கம்.

சவப்பெட்டியில் என்னென்ன வைக்கப்படும்?

போப் பிரான்சிஸ், பதவியேற்ற காலத்தில் அச்சிடப்பட்ட நாணயங்கள் மற்றும் போப்பாண்டவராக இருந்த காலத்தில் போப் பிரான்சிஸ் சந்தித்த முக்கிய நிகழ்வுகளைச் சுருக்கமாகக் கூறும் பத்திரம் ஆகியவை சீல் வைக்கப்படுவதற்கு முன்பு சவப்பெட்டியின் உள்ளே வைக்கப்படுகின்றன.

இந்த இறுதிச் சடங்கில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் பங்கேற்றுள்ளார். மேலும், போப் பிரான்சிஸின் பிறந்த நாடான ஆா்ஜென்டீனாவின் அதிபா் ஜேவியா் மிலே உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com