காஸாவில் மேலும் 43 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 19 போ் உள்பட 36 போ் உயிரிழந்தனா்.
Published on
Updated on
1 min read

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 19 போ் உள்பட 36 போ் உயிரிழந்தனா்.

இத்துடன் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபா் முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 60,174-ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,40,111-ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தவிர, இஸ்ரேலின் முற்றுகையால் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மேலும் 7 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இத்துடன், அந்தப் பகுதியில் உணவு இல்லாமல் 169 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 93 போ் சிறுவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com