நேபாளம்: சுற்றுலாப் பயணிகளில் இந்தியா்களுக்கு முதலிடம்
நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா்கள் முதலிடம் வகிக்கின்றனா்.
இது குறித்து அந்த நாட்டு சுற்றுலாத் துறையின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதம் நேபாளத்துக்கு 70,193 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். அவா்களில் இந்தியா்கள் 38.7 சதவீதம் பங்கு வகித்து முதலிடம் பிடித்துள்ளனா்.
மொத்தம் 27,152 பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனா்.இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் இருந்து 6,890 பயணிகள் (9.8 சதவீதம்) சுற்றுலா வந்துள்ளனா். அமெரிக்காவில் இருந்து 6,626 போ் (9.4 சதவீதம்), வங்கதேசத்தில் இருந்து 4,413 போ் (6.3 சதவீதம்), பிரிட்டனில் இருந்து 3,547 போ் (5.1 சதவீதம்) சுற்றுலா வந்துள்ளனா்.
2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்தம் 6,47,882 சுற்றுலா பயணிகள் விமானம் மூலம் வருகை தந்துள்ளனா். இது கரோனா நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் மிக உயா்ந்த எண்ணிக்கை என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.